பொன்னும் மெய்ப் பொருளும் தருவாய் போற்றி போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி! இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி பிறர் வயமாகா பெரியோய் போற்றி பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி பேரருட் கடலாம் பொருளே போற்றி ! முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி மூவுலகுந்தொழ மூத்தோய் போற்றி அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி ! இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி மங்கல நாயகி மாமணி போற்றி வளமை நல்கும் வல்லியே போற்றி அறம் வளர்நாயகி அம்மையே போற்றி மின் ஒளியம்மையாம் விளக்கே போற்றி ! மின் ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி தையல் நாயகித் தாயே போற்றி தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி முக்கட் சுடரின் முதல்வி போற்றி ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி! சூ...