Skip to main content

சீரடி சாய்பாபா பாடல்

ஷீரடி வாழும் சாயி பாபா

பாபா.. சாயி பாபா ஷீரடி வாழும் சாயி பாபா..

ஷீரடி வாழும் சத்குரு நாதா
சீரடி தொழுதேன் சிவகுரு நாதா
நாளும் பொழுதும் நலமாய் வாழ
அருள்வாய் பகவானே
சீரடி பாபவே….
சீரடி பாபவே..
ஞான ரூபனே
தவ யோகா நாதனே
பாதம் என்பது கங்கை நதி
மூழ்கிட மாறிடும் ஜென்ம விதி
உடலும் பொருளும் அர்ப்பணம் செய்தேன் சாயி
பாபாவே..
தாமரை பதமோ, அர்ப்பணம் முகம்
மல்லிகை மென்மையோ
ஆயிரம் ஆயிரம் பூக்கள் மணக்கும்
மலரின் மன்னவனோ
பாபா நீயே மலரானாய்
மனமெனும் பூவை சமர்ப்பனமாய்
அடிமலர் வைத்தே அண்டி இருந்தேன் சாயி பாபாவே..
மலரினை போல மலர்ச்சி தந்து
திருவடி சேர்ப்பாய் பாபாவே
தங்கமோ வெள்ளியோ
ஒளி உமிழும் வைர வைடூரியமோ
மரகத பாபாவே தங்கமோ நீளம் கலந்த
மாணிக்க மணிமகுடா
சீரடி வாழும் பொற்குடமே
நவமணி உயிரை சமர்ப்பனமாய்
செம்பவளத்திரு அடி நிழல் வைத்தேன் சத்குரு பாபாவே
பொன்மணிகரமாய் எனை சுமந்தே
ஓங்கிட வைப்பாய் சாய் பாபா

Comments

Popular posts from this blog

சாய் சத்சரிதம்

தினமொரு சாய்சரிதம்-1 சாய்பாபா தினமும் அதிகாலையிலேயே எழுந்து விடுவார். மசூதிக்குள் எரியும் நெருப்புக்குண்டமா ன துணி அருகில் உள்ள தூணின் மீது சாய்ந்து அமர்ந்த நிலையில், தியானத்தில் ஆழ்ந்து விடுவார். அந்த தியானத்தில் அவர் என்ன செய்கிறார் என்பதே யாருக்கும் தெரியாது. ஏனெனில் அதிகாலை தியானத் தின்போது அவர் தம் அருகில் யாரையும் வர விட்டது இல்லை. தியானத்தின்போது அவர் வாய், “அல்லா மாலிக்“ என்று முணுமுணுத்து கொண்டே இருக்கும். இதை தூரத்தில் இருந்து நிறைய பக்தர்கள் பார்ப்பதுண்டு. அவர்களில் பலர், பாபா ஏதோ மந்திரம் ஜெபிக்கிறார் என்று நினைத்தது உண்டு. அதோடு அந்த மந்திரம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதும் உண்டு. சில பக்தர்கள் இதுபற்றி பாபாவிடமே நேரில் கேட்டனர். “பாபா... உங்களை நான் குருவாக ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு உபதேசம் செய்யுங்கள்” என்று கேட்டனர். ஆனால் சாய்பாபா சீரடியில் இருந்த 60 ஆண்டுகளில் தம் பக்தர்கள் யாருக்கும் எந்த மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்ததில்லை. உபதேசமும் செய்தது இல்லை. பாபாவிடம் உபதேசம் பெற்று விட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்த அனைவரும் தோல்வியைத் தழுவி...