தினமொரு சாய்சரிதம்-1 சாய்பாபா தினமும் அதிகாலையிலேயே எழுந்து விடுவார். மசூதிக்குள் எரியும் நெருப்புக்குண்டமா ன துணி அருகில் உள்ள தூணின் மீது சாய்ந்து அமர்ந்த நிலையில், தியானத்தில் ஆழ்ந்து விடுவார். அந்த தியானத்தில் அவர் என்ன செய்கிறார் என்பதே யாருக்கும் தெரியாது. ஏனெனில் அதிகாலை தியானத் தின்போது அவர் தம் அருகில் யாரையும் வர விட்டது இல்லை. தியானத்தின்போது அவர் வாய், “அல்லா மாலிக்“ என்று முணுமுணுத்து கொண்டே இருக்கும். இதை தூரத்தில் இருந்து நிறைய பக்தர்கள் பார்ப்பதுண்டு. அவர்களில் பலர், பாபா ஏதோ மந்திரம் ஜெபிக்கிறார் என்று நினைத்தது உண்டு. அதோடு அந்த மந்திரம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதும் உண்டு. சில பக்தர்கள் இதுபற்றி பாபாவிடமே நேரில் கேட்டனர். “பாபா... உங்களை நான் குருவாக ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு உபதேசம் செய்யுங்கள்” என்று கேட்டனர். ஆனால் சாய்பாபா சீரடியில் இருந்த 60 ஆண்டுகளில் தம் பக்தர்கள் யாருக்கும் எந்த மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்ததில்லை. உபதேசமும் செய்தது இல்லை. பாபாவிடம் உபதேசம் பெற்று விட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்த அனைவரும் தோல்வியைத் தழுவி...
சரஸ்வதி ஓம் அறிவுருவே போற்றி ஓம் அறியாமை அழிப்பவளே போற்றி ஓம் அண்டினோர்க்கு எளியவளே போற்றி ஓம் அநுபூதி அருள்பவளே போற்றி ஓம் அறிவுக்கடலே போற்றி ஓம் அளத்தற்கரியவளே போற்றி ஓம் அன்னவாகினியே போற்றி ஓம் அகிலலோக குருவே போற்றி ஓம் நன்மை அருள்பவளே போற்றி ஓம் ஆசானாய்க் அருகிலிருப்பவளே போற்றி ஓம் ஆனந்த ரூபியே போற்றி ஓம் ஆதார சக்தியே போற்றி ஓம் வல்லமை இறைவியே போற்றி ஓம் இகபரசுகம் அளிப்பவளே போற்றி ஓம் ஈடு இணை இல்லாதவளே போற்றி ஓம் நல்லெண்ணங்களை ஈடேற்றுபவளே போற்றி ஓம் உண்மைப் பொருளே போற்றி ஓம் உயர்திரு தேவியே போற்றி ஓம் உய்யும் வழியே போற்றி ஓம் உயர்வளிப்பவளே போற்றி ஓம் ஏடுஏந்தியவளே போற்றி ஓம் ஓங்கார வடிவே போற்றி ஓம் கலைக் களஞ்சியமே போற்றி ஓம் கற்போர் தலைவியே போற்றி ஓம் கல்விப் பொருளே போற்றி ஓம் கரை சேர்ப்பவளே போற்றி ஓம் கலைவாணியே போற்றி ஓம் கலையரசியே போற்றி ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி ஓம் காயத்ரி தேவியே போற்றி ஓம் குருவே ப...