Skip to main content
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய



ஓடி  ஓடி ஓடி ஓடி  உட்கலந்த  ஜோதியை
நாடி  நாடி நாடி நாடி  நாட்களும்  கழிந்துபோய்
வாடி  வாடி  வாடி  வாடி  மாண்டு  போன  மாந்தர்காள்
கோடி  கோடி கோடி கோடி  எண்ணிறந்த  கோடியே         
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய



என்னிலே  இருந்த  ஒன்றை யான்  அறிந்ததில்லையே
என்னிலே  இருந்த  ஒன்றை யான் அறிந்துக் கொண்டபின்
என்னிலே  இருந்த  ஒன்றை யான்  கானவல்லரோ
எனிலே இருந்திருந்து   யான்  உணர்ந்து  கொண்டனே          
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய



நானதேது  நீயதேது  நடுவில்  நின்றதேதடா
கோனதேது  குருவதேது  கூ றிடும்  குலாமரே
ஆனதேது  அழிவதேது  அப்புறத்தில்  அப்புறம்
ஈனதேது  ராம  ராம  ராம வென்ற  நாமமே               
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய



அஞ்சேழுத்திலே  பிறந்து அஞ்சேழுத்திலே  வளர்ந்து
அஞ்சேழுத்தை  ஓதுகின்ற பஞ்ச  பூத  பாவிகாள்
அஞ்சேழுத்திலோர்  எழுத்து  அறிந்து    கூற வல்லீறேல்
அஞ்சல்  அஞ்சல்  என்று  நாதன்  அம்பலத்தில் ஆடுமே           
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய



இடது  கண்கள்  சந்திரன்  வலது கண்கள்  சூரியன்
இடக்கை  சங்கு  சக்கரம் வலக்கை  சூலமானமுழு
எடுத்த  பாதம்  நீள் முடி  எண்திசைக்கும்  அப்புறம்
உடல் கலந்து நின்ற மாயம்  யாவர்  காண வல்லரோ             
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய



உருவுமல்ல  வெளியுமல்ல  ஒன்றைமேவி  நின்றதல்ல
மருவுமல்ல  காதமல்ல  மற்றதல்ல  அற்றதல்ல
பெரியதல்ல  சிறியதல்ல  பேசுமாவி  தானுமல்ல
அரியதாகி  நின்ற  நேர்மை  யாவர்காண  வல்லரோ                
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய



மண்கலங் கவிழ்ந்த  போது  வைத்து  அடுக்குவார்
வெண்கலங்  கவிழ்ந்த  போது  வேணுமென்று  பேணுவார்
நண்கலங் கவிழ்ந்த  போது  நாறுமென்று  போடுவார்
எண்கலந்து  நின்றமாயம்   என்ன  மாய  மீசனே                      
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய



ஆனவஞ்  செழுத்துளே   அண்டமும்  அகண்டமும்
ஆனவஞ்  செழுத்துளே  ஆதியான  மூவரும்
ஆனவஞ்  செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ்  செழுத்துளே  அடங்கலாவ  லுற்றதே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய

Comments

Popular posts from this blog

சாய் சத்சரிதம்

தினமொரு சாய்சரிதம்-1 சாய்பாபா தினமும் அதிகாலையிலேயே எழுந்து விடுவார். மசூதிக்குள் எரியும் நெருப்புக்குண்டமா ன துணி அருகில் உள்ள தூணின் மீது சாய்ந்து அமர்ந்த நிலையில், தியானத்தில் ஆழ்ந்து விடுவார். அந்த தியானத்தில் அவர் என்ன செய்கிறார் என்பதே யாருக்கும் தெரியாது. ஏனெனில் அதிகாலை தியானத் தின்போது அவர் தம் அருகில் யாரையும் வர விட்டது இல்லை. தியானத்தின்போது அவர் வாய், “அல்லா மாலிக்“ என்று முணுமுணுத்து கொண்டே இருக்கும். இதை தூரத்தில் இருந்து நிறைய பக்தர்கள் பார்ப்பதுண்டு. அவர்களில் பலர், பாபா ஏதோ மந்திரம் ஜெபிக்கிறார் என்று நினைத்தது உண்டு. அதோடு அந்த மந்திரம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதும் உண்டு. சில பக்தர்கள் இதுபற்றி பாபாவிடமே நேரில் கேட்டனர். “பாபா... உங்களை நான் குருவாக ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு உபதேசம் செய்யுங்கள்” என்று கேட்டனர். ஆனால் சாய்பாபா சீரடியில் இருந்த 60 ஆண்டுகளில் தம் பக்தர்கள் யாருக்கும் எந்த மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்ததில்லை. உபதேசமும் செய்தது இல்லை. பாபாவிடம் உபதேசம் பெற்று விட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்த அனைவரும் தோல்வியைத் தழுவி...