Skip to main content

உதியே மருந்து!


உதியே மருந்து!

ஷீரடி நாதனின் பரம பக்தரான ஒருவரது மனைவி, பிரசவம் ஆன இரண்டு நாள் கழித்து திடீரென்று வயிறு உப்பி மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டார். பிரசவம் பார்த்த பெண் மருத்துவர், அந்தப் பெண்மணியை உடனடியாக வேறு பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டார். அதைக் கேட்டு கூடியிருந்த அனைவரும் அழ ஆரம்பித்து விட்டனர். அந்த சமயத்தில் அந்தப் பெண்ணின் கணவரான பக்தர், பாபா, தயவு செய்து எனது மனைவியைக் காப்பாற்று! என்று சத்தம்போட்டு பிரார்த்தித்தார். பின்னர் தன் மனைவியின் வலது மணிக்கட்டில் புனித கயிறைக் கட்டி, உப்பிய வயிற்றுப் பகுதியில் சிறிது உதியைத் தடவினார். கொஞ்சம் உதியை அவரது வாயில் இட்டார். இது நடந்த ஐந்து நிமிடத்தில் உப்பியிருந்த வயிறு மீண்டும் சகஜ நிலைக்கு வந்து விட்டது. அந்தப் பெண் சீராக கவாசிக்கத் தொடங்கினாள். சாயிநாதன் மீது நம்பிக்கை வைத்து சரணாகதி அடைந்தவரை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். அவரது உதியே மருந்தாக விளங்கும் என்பதை எல்லோரும் உணர்ந்தார்கள்

Comments

Popular posts from this blog

சாய் சத்சரிதம்

தினமொரு சாய்சரிதம்-1 சாய்பாபா தினமும் அதிகாலையிலேயே எழுந்து விடுவார். மசூதிக்குள் எரியும் நெருப்புக்குண்டமா ன துணி அருகில் உள்ள தூணின் மீது சாய்ந்து அமர்ந்த நிலையில், தியானத்தில் ஆழ்ந்து விடுவார். அந்த தியானத்தில் அவர் என்ன செய்கிறார் என்பதே யாருக்கும் தெரியாது. ஏனெனில் அதிகாலை தியானத் தின்போது அவர் தம் அருகில் யாரையும் வர விட்டது இல்லை. தியானத்தின்போது அவர் வாய், “அல்லா மாலிக்“ என்று முணுமுணுத்து கொண்டே இருக்கும். இதை தூரத்தில் இருந்து நிறைய பக்தர்கள் பார்ப்பதுண்டு. அவர்களில் பலர், பாபா ஏதோ மந்திரம் ஜெபிக்கிறார் என்று நினைத்தது உண்டு. அதோடு அந்த மந்திரம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதும் உண்டு. சில பக்தர்கள் இதுபற்றி பாபாவிடமே நேரில் கேட்டனர். “பாபா... உங்களை நான் குருவாக ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு உபதேசம் செய்யுங்கள்” என்று கேட்டனர். ஆனால் சாய்பாபா சீரடியில் இருந்த 60 ஆண்டுகளில் தம் பக்தர்கள் யாருக்கும் எந்த மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்ததில்லை. உபதேசமும் செய்தது இல்லை. பாபாவிடம் உபதேசம் பெற்று விட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்த அனைவரும் தோல்வியைத் தழுவி...